நீதியரசருக்கு முன்னாள் முதல்வர் இரங்கல்

ACTIVISMFEATUREDPOLITICAL

6/17/20251 min read

மேனாள் நீதிபதி மறைவிற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் இரங்கல்.

ஜூன்.17.2025 சென்னை

உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. M.M. சுந்தரேஸ் அவர்களின் தந்தையாரும், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான, திரு. V. K. முத்துசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

பாசமிகு தந்தையை இழந்து வாடும் நீதியரசர் திரு. M. M. சுந்தரேஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும், நீதித்துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த மூத்த வழக்கறிஞர் திரு. V.K. முத்துசாமி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தனது அறிக்கையின் வாயிலாக இரங்கலை வெளியிட்டுள்ளார்.

Related Stories