தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி இல்ல திருமண விழா

ACTIVISMFEATUREDPOLITICALPOLITICS

Editor CMT

2/22/20261 min read

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கே.கோபிநாத் திருமண விழாவில் மாவட்ட கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தினர்.

பிப்.22.2026 திருச்சி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம் திருச்சி புறநகர் பகுதியை சார்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளரும் திருச்சி திருவெறும்பூர் வின் நகர் பகுதியைச் சார்ந்த கழக நிர்வாகிகளுமான திரு கோபிநாத் கலியமூர்த்தி அவர்களின் புதல்வி தர்ஷினி - மணிகண்டன் அவர்களின் திருமண விழா பெல் நிறுவன குடியிருப்பில் உள்ள ராமானுஜர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ப.குமார் அவர்கள் பங்கேற்று திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். கொண்டாட்டம் இருந்த இந்நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தைச் சார்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் பி ஹெச் எல் அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பத்திரிக்கையாளர் நண்பர்கள் என திரளாக பங்கேற்று சிறப்பு செய்தனர்.

Related Stories